9
9. நடுங்கநாட்டம்
மேல் “நடுங்கல், புலிமிசை வைத்தல்
புகலுங்காலே”, என்றோதப்பட்ட நடுங்கநாட்டமென்பது கூட்டமுண்மை யுணர்ந்தனளாயினும், தலைமகள்
பெருநாணினளாகலானும் தான் அவள் குற்றேவன்மகளாகலானும் பின்னும் தான் சொல்லாடாது அவடன்னைக்
கொண்டே கேட்பது காரணமாக நெருங்கிநின்று, ஒரு புலி ஒருவனை யெதிர்ப்பட்டதெனத் தோழி அவளை
நடுங்க நாடாநிற்றல். அதற்குச் செய்யுள்.-
72. ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன்
னாரின்முன்னித்
______________________________________________________________
9.1. நுடங்கிடைப் பாங்கி
நடுங்க நாடியது.
இதன் பொருள்: இருவர் அறியா
அடி மூவாயிரவர் வணங்கத்தில்லை அம்பலத்து நின்றோனை உன்னாரின்-அயனும் அரியுமாகிய இருவரறியாத
அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத் தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல
வருந்த: முன்னித் தீ வாய் உழுவை கிழித்தது-எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது,
அங்காப்ப; சிறிதே பிழைப்பித்து இன்று ஓர் ஆண்டகை மணிவேல் பணி கொண்ட ஆறு-அதனைச் சிறிதே
தப்புவித்து இன்றோராண்டகை மணியையுடைய வேலைப் பணிகொண்டவாறென் எ-று.
அயனும் அரியுந் தில்லையம்பலத்திற்சென்று
வணங்கு மாறறிந் திலரென்னுங் கருத்தினராகலின், ஆவாவென்பது அருளின்கட் குறிப்பு. இரக்கத்தின்கட்குறிப்பாய்த்
தீவாயுழுவை கிழித்த தென்பதனை நோக்கி நின்றதெனினும் அமையும். வருந்தஎன ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது.
கொடிய வுள்ளத்தராகலின் உன்னாதாரைப் புலிக்குவமையாக வுரைப்பினு மமையும்., தீவாயை யுடைய வுழுவை
அவனைக் கிழித்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும். அந்தோவென்பது:
இரக்கத்தின்கட்குறிப்பு. இறுதிக்கண் ஆவா வென்பது: வியப்பின்கட்
|