பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
218

10

10. மடற்றிறம்

மடற்றிறம் என்பது நடுங்கநாடவும் பெருநாணினளாதலின், தலைமகள் தன்குறை சொல்லமாட்டாது நிற்ப, இனி இவளிறந்துபடவுங்கூடுமென உட்கொண்டு தலைமகனுடன் சொல்லாடத் தொடங்காநின்ற தோழி, தானும் பெருநாணினளா தலிற் பின்னுந் தலைமகன் குறையுறவேண்டிநிற்ப, அந்நிலைமைக்கட்டலைமகன் சென்று, இந்நாளெல்லாம் என்குறை நின்னான் முடியுமென்று நின்னை வந்திரந்தேன்: இது நின்னான் முடியாமையின் யான் மடலூர்ந்தாயினும் இக்குறை முடித்துக் கொள்வேனெனத் தோழிக்குக் கூறாநிற்றல். என்னை.

    முன்னுற வுணரினு மவன்குறை யுற்ற
    பின்ன ரல்லது கிளவிதோன் றாது.

-இறையனாரகப் பொருள் -9

என்பவாகலின்.

    ஆற்றா துரைத்த லுலகின்மேல் வைத்த
    றன்றுணி புரைத்த லொடுவகை யுரைத்த
    லருளா லரிதென னடையா லரிதென
    லவயவ மெழுத லரிதென விலக்க
    லுடம்படாது விலக்க லுடம்பட்டு விலக்க
    றிடம்பட வொன்பதுஞ் செப்புங் காலை
    வடம்படு முலைமேன் மடலா கும்மே.

________________________________________________________________

    மடற்றிறம் - இதன் பொருள் : ஆற்றாதுரைத்தல், உலகின்மேல் வைத்துரைத்தல், தன்றுணிபுரைத்தல், மடலேறும்வகையுரைத்தல், அருளாலரிதெனவிலக்கல், மொழிநடையெழுதலரிதெனவிலக்கல், அவயவமெழுதலரிதெனவிலக்கம், உடம்படாதுவிலக்கல், உடம்பட்டு விலக்கல் எனவிவை ஒன்பதும் மடற்றிறமாம் எ-று.

    அவற்றுள்-