10
மடற்றிறம்
10.3 தன்துணிபுரைத்தல்
தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின்மேல்
வைத்துணர்த்தி அதுவழியாக நின்று, என்னையும் ஒருபெண் கொடி பிறரிகழ மடலேறப்பண்ணாநின்றதென
முன்னிலைப்புற மொழியாகத் தன்றுணிபு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
75. விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே.
75
______________________________________________________________
10.3. மானவேலவன் மடன்மாமிசை
யானுமேறுவ னென்னவுரைத்தது.
இதன் பொருள் :
விண் மடங்க - விண் மடங்கவும், விரி நீர் பரந்து கரப்ப - விரிநீர் பரத்தலான் வெற்பொளிப்பவும்;
மண் மடங்க வரும் ஒருகாலத்தும் மன்னிநிற்கும் அண்ணல் - மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய
ஒரு காலத்தின்கண்ணும் நிலைபெற்றுநிற்கும் அண்ணல்; மடங்கல் அதள் அம்பலவன் - சிங்கத்தினது
தோலையுடைய அம்பலவன்; அருள் இலர் போல் பெண்ணை மடல்மிசை யான் வரப் பண்ணிற்று ஓர் பெண்
கொடி - அவனதருளில்லாதாரைப் போலப் பிறரிகழப் பனைமடன்மேல் யான் வரும் வண்ணம் அறிவின்மையைச்
செய்தது ஒருபெண்கொடி எ-று.
விண்ணை மண்ணை என்புழி
ஐகாரம்: அசைநிலை. மடங்குதல்-தத்தங்காரணங்களினொடுங்குதல், மடங்கல் - புலியெனினுமமையும்,
மானம் - கொண்டாட்டம்; வேலை யுடையவனது மானமாகிய குணம் வேன் மேலேற்றப் பட்ட தெனினுமமையும்.
இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை யுணர்த்துதல்.
75
|