10
மடற்றிறம்
10.4 மடலேறும் வகையுரைத்தல்
மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும்
பெருநாணினளாதலிற் சொல்லாடாத தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமைதோன்ற நின்று, யான்
நாளை நின்னூர்த்தெருவே மடலுங்கொண்டு வருவேன்; பின்வருவது காணெனத் தலைமகன் தான் மடலேறும்வகை
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
76. கழிகின்ற வென்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ்
சீறூர்த்
தெருவிடைப் போதுவனே.
76
_______________________________________________________________
10.4. அடல்வேலவ னழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.
இதன் பொருள்: கழிகின்ற
என்னையும் - கழியாநின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில் தன்னையும் - யானத்தன்மையனாகவுந்
தன்றன்மையளாய் நின்ற நின்னுடைய கார் மயிறன்னையும்; கிழி ஒன்ற நாடி எழுதி - கிழிக்கட்பொருந்த
ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு-யான் அதனைக் கையிற் கொண்டு; என் பிறவி இன்று கெட்டு அழிகின்றது
ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை - என் பிறவியை இன்றுகெட்டழியாநின்றதாகச் செய்த தாளையுடைய
அம்பலவனது கயிலையின்; அம் தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் -
அழகிய தேன்பொழியாநின்ற சாரற் கணுண்டாகிய நுமது சீரூர்த்தெருவின்கட்டிரிவேன்; பின்வருவது காண்
எ-று.
தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய்,
நின்கார் மயிலென்றான், என்னையும் நின் கார்மயிறன்னையும் மடலிடத்தெழுது வேனென்றதென்னை,
கார்மயிலை யெழுதுவதன்றித் தன்னையுமெழுதுமோவெனின், மடலெழுதிக் கையிற்கொண்டால்
|