பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
223

10

மடற்றிறம்

10.5 அருளாலரிதெனவிலக்கல்

   
அருளாலரிதென விலக்கல் என்பது தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று கூறக்கேட்ட தோழி இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டுவந்து, எதிர்நின்று, நீர்மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று அவனதருளை யெடுத்துக்கூறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

77. நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
        நான்முகன் மாலறியாக்
   கடனாம் உருவத் தரன்தில்லை
        மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
   உடனாம் பெடையொடொண் சேவலும்
        முட்டையுங் கட்டழித்து
   மடனாம் புனைதரின் யார்கண்ண
        தோமன்ன இன்னருளே.

77

_____________________________________________________________

உரையாடுகையின்றி இவனும் ஓவியமாகலின், மடலின்றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும் அவள்பேரையும் எழுதுகையால் என்னையுமென்றான். கார்மயில் - கார்காலத்து மயில். அழிகின்றதென நிகழ்காலத்தாற் கூறினார். பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை நின்றமையின். மெய்ப்பாடும் பயனும் அவை

76

10.5.  அடல்வேலண்ண லருளுடைமையின்
      மடலேற்றுனக் கரிதென்றது.

   
இதன் பொருள்: நடன் - கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன் - நாம் வணங்கும் பழையோன்; நான்முகன் மால் எல்லை அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் - நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய எல்லைகளை அறியாத இயல்பாகிய வடிவையுடைய அரன்; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை - அவனது தில்லைக்கணுண்டாகிய வளத்தையுடைய கண்ணிற்கார்ந்த பெண்ணைக்கண்; உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடல் நாம் புனைதரின் - உடனாகும் பெடையோடும் ஒள்ளியசேவலையும் முட்டையையுங் காவலையழித்து மடலை நாம் பண்ணின்; மன்ன - மன்னனே; இன் அருள் யார்