10
மடற்றிறம்
10.6 மொழிநடை யெழுதலரிதென
விலக்கல்
மொழிநடையெழுதலரிதென விலக்கல்
என்பது அருளெடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமைகண்டு அவன் வழியொழுகி விலக்குவாளாக,
நுமதருள்கிடக்க மடலேறுவார் மடலேறுதல் மடலேறப்படுவாருருவெழுதிக் கொண்டன்றே; நுமக்கு அவள்
மொழி நடையெழுதல் முடியாதாகலின் நீயிர் மடலேறுமாறென்னோவென விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
78. அடிச்சந்த மால்கண் டிலாதன
காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.
78
________________________________________________________________
கண்ணது-இனிய அருள் இவ்வுலகத்தில்
யார்கண்ணதாம்? எ-று. அறியாவுருவமென வியையும், அறியாத அக்கடனுளதாமுருவமெனினு மமையும். மடல் விலக்கித்
தழீஇக் கொள்கின்றாளாதலின், நாமென உளப்படுத்துக் கூறினாள். நின்னருளென்பது பாடமாயின்,
யார் கண்ணருளுவை யென்றுரைக்க. அண்ணல்: முன்னிலைக் கண் வந்தது.
77
10.6. அவயவ மரிதின் அண்ணல்
தீட்டினும்
இவையிவை தீட்ட லியலா தென்றது.
இதன் பொருள்: சந்தம்
மால் கண்டிலாதன அடி காட்டி வந்து ஆண்டு கொண்டு - மறையும் மாலுங் கண்டறியாதனவாகிய அடிகளை எனக்குக்
காட்டித் தானே வந்தாண்டு கொண்டு; என் முடிச்சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும்
- அவ்வடிகளை என்முடிக்கு நிறத்தையுடைய பெரிய மலராகச் செய்யும் முன்னோனது புலியூரையொக்கும்;
கடிச்சந்த யாழ் கற்ற மென்மொழி - சிறந்த நிறத்தையுடைய யாழோசையின் றன்மையைக் கற்ற மென்மொழியையுடைய;
கன்னி அன நடைக்கு - கன்னியது அன்னத்தி னடைபோலு நடைக்கு; படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ
நும் பரிசகத்து-படிச்சந்தமாகப் பண்ணப்படும் படங்கள் உளவோ
|