10
மடற்றிறம்
10.7 அவயவமெழுத லரிதென விலக்கல்
அவயவமெழுதலரிதென விலக்கல் என்பது
அவளது மொழி நடைகிடக்க, இவைதாமெழுத முடியுமோ? முடியுமாயின் யான்சொன்ன படியே தப்பாமலெழுதிக்கொண்டு
வந்தேறுமென்று அவளதவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
79. யாழு மெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர்
கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.
79
_______________________________________________________________
நுமது சித்திரசாலையின்கண் எ-று.
கடிச்சந்தயாழ்கற்ற மென்மொழியென்பதற்குச்
சிறந்தவோசையையுடைய யாழ்வந்தினிதாக வொலித்தலைக்கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர்.
படிச்சந்தமென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய் அதுவென்றே கருதப்படுமியல்பையுடையது. படிச்சந்த மென்பது: பிரதிச்சந்தமென்னும்
வடமொழிச் சிதைவு.
78
10.7. அவயவ மானவை
யிவையிவை யென்றது.
இதன் பொருள்: யாழும்
எழுதி - மொழியாக மொழியோடொக்கும் ஓசையையுடைய யாழையுமெழுதி; எழில் முத்தும் எழுதி - முறுவலாக
எழிலையுடைய முத்துக்களையுமெழுதி; இருளில் மென்பூச் சூழும் எழுதி-குழலாக இருளின்கண் மெல்லிய பூவானியன்ற
சூழையு மெழுதி; ஒரு தொண்டையும் தீட்டி - வாயாக ஒரு தொண்டைக் கனியையு மெழுதி; இள மாம்
போழும் எழுதிற்று ஓர் கொம்பர் உண்டேல் - கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர்
கொம்ப ருண்டாயின்; கொண்டு போதுக-அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ-று.
என் தொல் பிறவி ஏழும்
எழுதாவகை சிதைத்தோன் புலியூர்.
|