பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
226

10

மடற்றிறம்

10.8 உடம்படாதுவிலக்கல்

   
உடம்படாது விலக்கல் என்பது எழுதலாகாமை கூறிக் காட்டி, அதுகிடக்க, நும்மை யாம் விலக்குகின்றே மல்லேம்; யான் சென்று அவணினைவறிந்து வந்தாற் பின்னை நீயிர் வேண்டிற்றைச் செய்யும்; அவ்வளவும் நீயிர் வருந்தாதொழியுமெனத் தானுடம்படாது விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

80. ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
        திண்மடல் நின்குறிப்புச்
   சீர்வாய் சிலம்ப திருத்த
        இருந்தில மீசர்தில்லைக்
   கார்வாய் குழலிக்குன் னாதர
        வோதிக்கற் பித்துக்கண்டால்
   ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
        செய்க அறிந்தனவே.

80

______________________________________________________________

இளமாம் போழும்-என்னுடைய பழையவாகிய பிறவிகளேழையும் கூற்றுவன் தன் கணக்கிலெழுதாத வண்ணஞ் சிதைத்தவனது புலியூரிளமாம் போழுமெனக்கூட்டுக.

    முத்துமென்னு மும்மை விகார வகையாற் றொக்குநின்றது. சூழென்றது சூழ்ந்த மாலையை. செய்தெனனெச்சங்கள் எழுதிற்றென்னுந்தொழிற்பெயரின் எழுதுதலொடுமுடிந்தன. எழுதிற்றென்பது செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறிநின்றது. வினையெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு மமையும். மொழியும் இவளதாகலின், அவயவமென்றாள், இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: நகை. பயன்: மடல்விலக்குதல்.

10.8.  அடுபடை யண்ணல் அழிதுய ரொழிகென
      மடநடைத் தோழி மடல்விலக் கியது.

   
இதன் பொருள்: உயர் பெண்ணைத் திண் மடல் ஊர்வாய் - உயர்ந்த பெண்ணையினது திண்ணிய மடலையூர்வாய்; ஒழிவாய் - அன்றியொழிவாய்; சீர் வாய் சிலம்ப - அழகுவாய்த்த சிலம்பையுடையாய்; நின் குறிப்புத் திருத்த இருந்திலம் - நின்கருத்தையாந்திருத்த விருந்தேமல்லேம்; ஈசர் தில்லைக் கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி - ஈசரது தில்லைக்கணுளளாகிய கருமைவாய்த்த