10
மடற்றிறம்
10.9 உடம்பட்டு விலக்கல்
உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது
முன்பொதுப் பட விலக்கி முகங்கொண்டு, பின்னர்த் தன்னோடு அவளிடை வேற்றுமையின்மைகூறி, யான்
நின்குறைமுடித்துத் தருவேன்; நீவருந்தவேண்டாவெனத் தோழி தானுடம்பட்டு விலக்கா நிற்றல். அதற்குச்
செய்யுள்-
81. பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
_____________________________________________________________
குழலையுடையாட்கு உனது விருப்பத்தைச்சொல்லி;
கற்பித்துக் கண்டால்-இதற்கு அவளுடம்படும் வண்ணஞ் சிலவற்றைக் கற்பித்துப் பார்த்தால்;
வாய்தரின் ஆர் அறிவார்-இடந்தருமாயினும் யாரறிவார்; பின்னை அறிந்தன செய்க-இடந்தாராளாயிற்
பின் நீயறிந்தவற்றைச் செய்வாயாக எ-று.
கார்போலுங் குழலெனினு மமையும்.
வாய்தரினென்பதற்கு வாய்ப்பினெனினுமமையும். பின்னைச் செய்கவென்றது நீகுறித்தது செய்வாய் ஆயினும்
என் குறிப்பிதுவென்றவாறு.
10.9. அரவரு நுண்ணிடைக்
குரவரு கூந்தலென்
உள்ளக் கருத்து விள்ளா
ளென்றது.
இதன் பொருள்: பை
நாண் அரவன்-பையையுடைய அரவாகிய நாணையுடையான்; படு கடல்வாய் படு நஞ்சு அமுது ஆம் மை நாண் மணிகண்டன்-ஒலிக்குங்
கடலிடத்துப்பட்ட நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; மன்னும் புலியூர்
மணந்த பொன்-அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; நாள் மொய் இம் முதுதிரை
வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும்-நாட்காலத்தாடும் பெருமையையுடைய இம்முதியகடற்கண் யானழுந்தினேனாயினும்
தான் என்னின் முற்பட்டழுந்தும்; மது வார் குழலாட்கு இன் அருள் இந்நாள் இது-தேனையுடைய நெடிய குழலாட்கு
என் கணுண்டாகிய இனிய அருள் இப்பொழுதித்தன்மைத்தாயிராநின்றது எ-று.
|