பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
228

New Page 1


    மொய்ந்நாண் முதுதிரை வாயான்
        அழுந்தினு மென்னின்முன்னும்
 
    இந்நா ளிதுமது வார்குழ
        லாட்கென்க ணின்னருளே.

81

__________________________________________________

அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு நிலப்பெயர் கொண்டது. மைந்நாணுங் கண்டமெனவியையும், மணிகண்டனென்பது வடமொழி யிலக்கணத்தாற்றொக்குப் பின்றிரிந்து நின்றது. மொய்-வலி; ஈண்டுப் பெருமைமேனின்றது. குற்றேவல் செய்வார்கட்பெரியோர்செய்யும் அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள். எனவே, தலை மகளது பெருமையுந் தன்முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று, அரா குரா வென்பன; குறுகி நின்றன. வருமென்பது; உவமைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்:  தலைமகனை யாற்றுவித்தல்.

81

மடற்றிறம் முற்றிற்று.