பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
229

11

11. குறைநயப்புக் கூறல்

குறைநயப்புக் கூறல் என்பது தலைமகனை மடல்விலக்கிக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பிக்க அவன் குறை கூறாநிற்றல். அதுவருமாறு.

    குறிப்பறி தலோடு மென்மொழி கூறல்
    விரவிக் கூற லறியாள் போறல்
    வஞ்சித் துரைத்தல் புலந்து கூறல்
    வன்மொழி கூறன் மனத்தொடு நேர்தல்
    சொன்னவிரு நான்குந் துறைகுறை நயப்பென
    மன்னிய பொருளில் வகுத்திசி னோரே.

____________________________________________________________

    குறைநயப்புக்கூறல் - இதன் பொருள்: குறிப்பறிதல், மென்மொழியாற் கூறல், விரவிக்கூறல், அறியாள்போறல், வஞ்சித்துரைத்தல், புலந்து கூறல், வன்மொழியாற்கூறல், மனத்தொடுநேர்தல் என விவை யெட்டுங் குறைநயப்பித்தலாம் எ-று. அவற்றுள்-