11
குறை நயப்புக் கூறல்
11.1 குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத்
துணியா நின்ற தோழி தெற்றெனக் கூறுவேனாயின் இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, நம்புனத்தின்கட்
சேயினது வடிவையுடையராய்ச் சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்; வந்து நின்று ஒன்று
சொல்லுவதுஞ் செய்கின்றிலர்; அவரிடத்து யாஞ்செய்யத்தக்க தியாதெனத் தான் அறியாதாள் போலத்
தலைமகளோடு உசாவி, அவணினைவறியாநிற்றல். என்னை,
ஆங்குணர்ந் தல்லது கிழவோ டேத்துத்
தான்குறை யுறுத றோழிக் கில்லை
-இறையனாரகப்பொருள்
-8
என்பவாகலின். அதற்குச் செய்யுள்-
82. தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை
யோன்சே
யெனச்சின வேலொருவர்
____________________________________________________________
11.1. நறைவளர் கோதையைக்
குறைநயப் பித்தற்
குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.
இதன் பொருள்: மாதே-மாதே;
தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி-தாதுபொருந்திய மலரையுடைய
குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய்
என-தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின
வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர்-சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும்
வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார்-வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே-மதுவார்ந்த
குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே-அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன்
எ-று.
|