பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
231

குறை நயப்புக் கூறல்

    மாதே புனத்திடை வாளா
        வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
    யாதே செயத்தக் கதுமது
        வார்குழ லேந்திழையே.

82.

11.2 மென்மொழியாற்கூறல்

   
மென்மொழியாற் கூறல் என்பது நினைவறிந்து முகங்கொண்டு அதுவழியாகநின்று, ஒருபெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம்புனத்தை விட்டுப் பேர்வதுஞ் செய்கின் றிலன்; தன்குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லுவதுஞ் செய்கின் றிலன்; இஃதென்ன மாயங்கொல்லோ அறிகின்றிலேனெனத் தோழி தான் அதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

83. வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
        மிக்கென்ன மாயங்கொலோ
   எரிசேர் தளிரன்ன மேனியன்
        ஈர்ந்தழை யன்புலியூர்ப்

_________________________________________________

குஞ்சி-தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென்றுரைப்பி னுமமையும். சேயோடொத்தல் பண்பு வடிவுமுதலாயினவும், சினவேலேந்தி வரையிடத்து வருதலுமாம். வேட்டைமுதலாகிய பயன்கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம்புகுகின்றாளாதலின், பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்குநின்றது; என்னை, மேலே “புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொல்” (தி.8 கோவை பா.83) என வருதலான். யாதேயென்னு மேகாரம்: வினா. மாதே ஏந்திழையே என்புழி ஏகாரம்: விளியுருபு. அறிகுற்றவென்பது அறியவேண்டிய வென்னும் பொருட்கண் வந்த ஒரு மொழிமுடிபு.

82

11.2  ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை
     இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
   

   
இதன் பொருள்: வரி சேர் தடங் கண்ணி - வரிசேர்ந்த பெரிய கண்ணையுடையாய்; ஒருவன் மம்மர் கைம்மிக்கு - ஒருவன் மயக்கங் கைம்மிக்கு; எரி சேர் தளிர் மேனியன் - எரியைச் சேர்ந்த