புர
குறை நயப்புக் கூறல்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே.
83
______________________________________________________________
தளிரையொக்கும் மேனியையுடையனுமாய்;
ஈர்ந்தழையன்-வாடாத தழையையுடையனுமாய்; இத் தேம்புனம் பிரியான் - இத்தேம்புனத்தைப்
பிரிகின்றிலன்; உரையான் - ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர் சடையோன்
புதல்வன்கொல் பூங்கணை வேள்கொல் என்னத் தெரியேம் - அவன்றன்னைப் புலியூர்க் கணுளனாகிய
புரிதலைச்சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய அம்பையுடைய காம வேளோவென்று யாந்துணிகின்றிலேம்;
என்ன மாயம் கொலோ - ஈதென்ன மாயமோ! எ-று
அவ்வாறு இறப்பப் பெரியோன்
இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்தமுடைத்தென்னுங் கருத்தால், என்ன மாயங்கொலோவென்றாள்.
புலியூர்ப்புரிசேர் சடையோன் புதல்வன் கொலென்றதனால் நம்மையழிக்க வந்தானோவென்றும், பூங்கணை
வேள்கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர்சடையோன்
புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்: ஐயம். மேனியன் தழைய னென்பன: வினையெச்சங்கள்.
மென்மொழி மொழிந்தது - மென் மொழியான் மொழிந்தது.
83.
|