பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
233

11

குறை நயப்புக் கூறல்

11.3 விரவிக்கூறல்

   
விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மனமெலியு மென்றஞ்சி, ஓரலவன் தன்பெடைக்கு நாவற்கனியை நல்கக் கண்டு ஒருபெருந்தகை பேய்கண்டாற்போல நின்றான்; அந்நிலைமையை நீ கண்டாயாயின் உயிர்வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலான் ஆற்றியுளேனாய்ப் போந்தேனென மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறாநிற்றல் அதற்குச் செய்யுள்-

84. நீகண் டனையெனின் வாழலை
        நேரிழை யம்பலத்தான்
   சேய்கண்டனையன்சென் றாங்கோ
        ரலவன்றன் சீர்ப்பெடையின்
   வாய்வண் டனையதொர் நாவற்
        கனிநனி நல்கக்கண்டு
   பேய்கண் டனையதொன் றாகிநின்
        றானப் பெருந்தகையே.

84

______________________________________________________________

11.3.  வன்மொழி யின்மனம் மெலிவ தஞ்சி
     மென்மொழி விரவி மிகுத்து ரைத்தது.


    இதன் பொருள்: 
நேர் இழை-நேரிழாய்; அம்பலத்தான் சேய் கண்டனையன்-அம்பலத்தான் புதல்வனைக்கண்டாற் போன்று இருக்கும் ஒருவன்; ஆங்கு ஓர் அலவன் தன் சீர்ப் பெடையின் வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி சென்று நனி நல்கக் கண்டு-அவ்விடத்து ஓரலவன் தனதழகையுடைய பெடையின் வாயின்கண் வண்டனையதொரு நாவற்கனியைச்சென்று மிகவுங் கொடுப்ப அதனைக்கண்டு; அப் பெருந்தகை பேய் கண்டனையது ஒன்று ஆகிநின்றான்-அப்பெருந்தகை பேயாற் காணப்பட்டாற் போல்வதோர் வேறுபாட்டை யுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை-அந்நிலையை நீகண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலின், அதனைக் கண்டும் ஆற்றியுளேனாயினேன் எ-று.

   
பேய்கண்டனைய தென்பதற்குப் பேயைக் கண்டாற்போல்வதோர் வேறுபாடென்றுரைப்பினு மமையும். பேய்கண்டனைய