பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
234

11

குறை நயப்புக் கூறல்

11.4 அறியாள் போறல்

   
அறியாள் போறல் என்பது பேய்கண்டாற்போல நின்றானெனத் தலைமகனிலைமைகேட்ட தலைமகள் பெருநாணினளாதலின் இதனையறியாதாளைப்போல, இஃதொரு கடல்வடி விருந்தவாறு காணாயெனத் தானொன்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

85. சங்கந் தருமுத்தி யாம்பெற
        வான்கழி தான்கெழுமிப்
   பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
        பொலிகலிப் பாறுலவு

____________________________________________________________

தொன்றையுடையனாயென்னாது ஒற்றுமைநயம் பற்றி ஒன்றாகி யென்றாள். நாவற்கனியை நனிநல்கக்கண்டு தன்னுணர்வொழியப் போயினான் இன்று வந்திலனென்னாது பேய்கண்டனையதொன்றாகி நின்றானென்று கூறினமையான் மென்மொழியும், சேய்கண்டனையனென்றதனால் வன்மொழியும் விரவியதாயிற்று. மிகுத்தல் - ஆற்றாமைமிகுத்தல். இவை மூன்றற்கும் மெய்ப் பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்.

84

11.4.  அறியாள் போன்று
      குறியாள் கூறியது.


   
இதன் பொருள்: ஏந்திழை-ஏந்திழாய்; பல் மா வங்கம் மலி தொல்லைக் கலி நீர் தில்லை வானவன் நேர் வரும் - இத்தன் மைத்தாகலிற் பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற பழையதாகிய கடல் தில்லைவானவற்கொப்பாம் எ-று.

   
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி-சங்குதரு முத்துக்களை யாம்பெறப் பெரிய கழிகளைத் தான் பொருந்தி; பொங்கும் புனற் கங்கை தாங்கி-பொங்கும் புனலையுடைய கங்கையைத் தாங்கி; பொலி கலிப் பாறு உலவு துங்கம் மலிதலை ஏந்தலின்-பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்களியங்குந் திரைகளின் மிகுதியை யுடைத்தாகலின், எனக் கடலிற்கேற்பவும்.