New Page 1
குறை நயப்புக் கூறல்
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே.
85
________________________________________________
சங்கம் தரும் முத்தி யாம் பெற
வான் கழி தான் கெழுமி-திருவடிக்கணுண்டாகிய பற்றுத்தரும் முத்தியை யாம் பெறும் வண்ணம் எல்லாப்பொருளையும்
அகப்படுத்து நிற்கும் ஆகாயத்தையுங் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்தி; பொங்கும்
புனற் கங்கை தாங்கி-பொங்கும் புனலையுடைய கங்கையைச் சூடி; பொலி கலிப்பாறு உலவு துங்கம் மலி
தலை ஏந்தலின்-மிக்க ஆரவாரத்தையுடைய பாறாகிய புட்கள் சூழாநின்ற உயர்வுமிக்க தலையோட்டை யேந்துதலின்,
எனத் தில்லைவானவற் கேற்பவும் உரைக்க.
வான்கழி-சிவலோக மெனினுமமையும்,
குறைநயப்பாற்றலைமகனிலைமை கேட்ட தலைமகள் பெருநாணினளாகலின், மறுமொழிகொடாது பிறிதொன்று
கூறியவாறு. ஒருசொற்றொடர் இருபொருட்குச் சிலேடை யாயினவாறுபோலத் தோழிக்கும் ஓர்ந்துணரப்படும்.
ஓர்ந்துணர்தலாவது இவ்வொழுக்கங் களவொழுக்கமாகையாலும், தலைமகள் பெருநாணினளாகையாலும்,
முன்றோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு வெளிப்படையாக மறுமொழி கொடாது, ஓர்ந்துகூட்டினால் மறுமொழியாம்படி
கடலின் மேல் வைத்துக் கூறினாள். என்னை, முன்னர் நீ புரிசேர்சடையோன் புதல்வனென்றும், பூங்கணைவேளென்றும்
உயர்த்துக் கூறிய வெல்லாம் அவனுக்குரிய, அங்ஙனம் பெரியவன் தன்மாட்டுண்டான புணர்ச்சியான பேரின்பத்தை
நாம் பெறுகை காரணமாக இங்ஙன மெளிவந்து உன்னைவந்து சேர்ந்தான்; அஃதென்போலவெனின், பெறுதற்கரிய
சங்கு தருகிற முத்தை நாம் பெறுவான் எளிதாகக் கடல் பெரிய கழியை வந்து பொருந்தினாற்போல,
இனி உனக்கு வேண்டியது செய்வாயாகவென மறுமொழியாயிற்று, மெய்ப்பாடு: மருட்கை, தோழி சொன்ன
குறையறியாள் போறலிற் பயன்: அறியாள்போறல்.
85
|