பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
237

கரங

குறை நயப்புக் கூறல்

கரங்கடந் தானொன்று காட்டமற்
        றாங்கதுங் காட்டிடென்று
    வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.

86

_________________________________________________

ஆங்கதென்பது ஒருசொல். இன்னும் வரங்கிடக்கிறானாகலின், முன்கண்டது ஒன்றுபோலுமென்பது கருத்து, புரங்கடந்தானடிகளைக் காணுமாறு வழிபட்டுக் காண்கையாவது அன்னத்திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடுமாதலால், இவரிங்ஙனந் தத்தநிலைப்பரிசேதேடுதல்.

    இவ்வாறு தேடாது தமதகங்காரத்தினான் மாறு பட்டுப் பன்றி தாமரையும் அன்னங்காடுமாகப் படர்ந்து தேடுதலாற் கண்டிலர். இது நெறியல்லா நெறியாயினவாறு. இனி இது தோழிக்குத் தலைவி மறுமொழியாகக் கூறியவாறு: என்னை? ஒன்று காட்ட வென்றது முன்னர்ப் பாங்கற்கூட்டம் பெற்றான் அதன்பின் நின்னினாய கூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்திரந்து குறையுறாநின்றான்; அஃதென்போலவெனின், மற்றாங்கதுங் காட்டிடென்று மால் வரங்கிடந்தாற்போல என்றவாறு.

    வஞ்சித்தல் - மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல். இவை யிவை-முன்னர்ப்பாட்டும் இப்பாட்டும். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்;  இவையிவை யென்னு மடுக்கானும் இனி “உள்ளப்படுவ னவுள்ளி” எனத் தலைமகளோடு புலந்து கூறுகின்றமையானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்பதறிக.

86