11
குறை நயப்புக் கூறல்
11.7 வன்மொழியாற் கூறல்
வன்மொழியாற் கூறல் என்பது
புலந்து கூறாநின்ற தோழி அக்கொடியோன் அருளுறாமையான் மெய்யிற் பொடியுங் கையிற்கிழியுமாய்
மடலேறத் துணியாநின்றான்; அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று உரையுமுளதா யிருந்தது; இனி நீயும்
நினக்குற்றது செய்வாயாக; யானறியேனென வன்மொழியாற் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
88. மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
____________________________________________________________
படும்” (குறள். 824) என்பதுபோல.
மறப்பதென்பது; வியங்கோள். வருந்திய சொல்லின்-வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான்.
சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது-வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற் கேட்குமளவுஞ்
சொல்லுஞ் சொல்.
அஃதாவது நீ சொல்லத்தகுங் காதற்
றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது.
87
11.7. கடலுல கறியக் கமழலந்
துறைவன்
மடலே றும்மென வன்மொழி
மொழிந்தது.
இதன் பொருள்: மெய்யில்
மேவி அம் தோல் உடுக்கும் தில்லை யான்பொடி - மெய்க்கட் பூசியது விரும்பி நல்ல தோலைச் சாத்துந்
தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி-கையின்கணுண்டாகியது சித்திரம்
விளங்குங் கிழி; நின் எழில் என்று உரை உளது - அக்கிழிதான் நின் வடிவென்று உரையுமுளதா யிருந்தது;
தூவி அம் தோகை அன்னாய் - தூவியையுடைய அழகிய தோகையை யொப்பாய்; என்ன பாவம் - இதற்குக்
காரணமாகிய தீவினை யாதென்றறியேன்! ; சொல் ஆடல் செய்யான் - ஒன்று முரையாடான்; பாவி -
இருந்தவாற்றான் அக்கொடியோன்; அந்தோ பனை மா மடல் ஏறக்கொல் பாவித்தது -அந்தோ! பனையினது
பெரிய மடலேறுதற்குப் போலு நினைந்தது எ-று.
|