தூவ
குறை நயப்புக் கூறல்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே.
88
11.8 மனத்தொடுநேர்தல்
மனத்தொடு நேர்தல் என்பது ஆற்றாமையான்
மடலேறத் துணியாநின்றானெனத் தோழியால் வன்மொழி கூறக்கேட்ட தலைமகள் அதற்குத் தானாற்றாளாய்,
தலைமகனைக் காண வேண்டித் தன் மனத்தொடு கூறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்-
89. பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை
யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
________________________________________________
கிழியென்றது கிழிக்கணெழுதிய
வடிவை. தன்குறையுறவு கண்டு உயிர்தாங்கலேனாக அதன்மேலும் மடலேறுதலையுந் துணியாநின்றானென்னுங்
கருத்தால், பாவியென்றாள். எனவே, அவனாற்றாமைக்குத் தானாற்றாளாகின்றமை கூறினாளாம். கமழலந்
துறைவனென்பதற்கு. கூம்பலங் கைத்தல (தி.8 கோவை.பா.11) மென்பதற் குரைத்தது உரைக்க. இவை மூன்றற்கும்
மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்.
88
11.8. அடல்வேலவ
னாற்றானெனக்
கடலமிழ்தன்னவள்
காணலுற்றது.
இதன் பொருள்: பொன் ஆர்
சடையோன் புலியூர் புகழார் என-பொன்போலும் நிறைந்த சடையையுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல
வருந்த; புரி நோய் என்னால் அறிவு இல்லை - எனக்குப் புரிந்த நோய் என்னாலறியப்படுவதில்லை; யான்
ஒன்று உரைக்கிலன் - ஆயினும் இதன்றிறத்து யானொன்றுரைக்க மாட்டேன்; துணை மனனே - எனக்குத்
துணையாகிய மனனே; வந்து அயலார்
|