பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
241

New Page 1

குறை நயப்புக் கூறல்

சொன்னாரெனுமித் துரிசுதுன் 
        னாமைத் துணைமனனே
    என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
        நீர்மை இனியவர்க்கே.

89

______________________________________________________________

சொன்னார் எனும் இத்துரிசு துன்னாமை - அயலார் சொன்னாரென்று  இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண் வாராமல்; என் ஆழ் துயர்வல்லையேல்-அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின்; நீர்மை இனிய வர்க்குச் சொல்லு-நீர்மையையுடைய இனியவர்க்கு நீ சொல்லுவாயாக எ-று.

    புரிதல்-மிகுதல். அயலார் சொன்னாரென்றது “ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென்றுரையுளதால்” (திரு.8 கோவை பா.88) என்றதனைப் பற்றி. அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை அயலார்வந்து சொன்னாரென்னும் இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப்பொருட்கு அயலாரென்றது தோழியை நோக்கி. ஆழ்துயர்-ஆழ்தற்கிடமாந்துயர்:

    இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றளாய் நிற்றலின், தோழி குறைநேர்ந்தமை யுணருமென்பது பெற்றாம்; ஆகவே இது தோழிக்கு வெளிப்பட மறுமொழி கூறியவாறாயிற்று. சொல்லு நீர்மையினியவர்க்- கென்றவதனால் தன்றுயரமும் வெளிப்படக்கூறி மடலால் வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று.

    மெய்ப்பாடு: அச்சம். ஆற்றானெனக் கேட்டலிற் பயன்: குறைநேர்தல். 89

குறைநயப்புக் கூறல் முற்றிற்று.