பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
242

12

12. சேட்படை

சேட்படையென்பது தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னினாய கூட்டங் கூட்டலுறுந்தோழி தலைமகளது பெருமையும் தனது முயற்சியதருமையும் தோன்றுதல் காரணமாகவும், இத்துணை யருமையுடையாள் இனி நமக்கெய்துதற் கருமையுடையளென இதுவே புணர்ச்சியாக நீட்டியாது விரைய வரைந்து கோடல் காரணமாகவும், தலைமகனுக்கியைய மறுத்துக் கூறாநிற்றல். அது வருமாறு

    தழைகொண்டு சேற றகாதென்று மறுத்த
    னிலத்தின்மை கூற னினைவறிவு கூறல்
    படைத்து மொழிதலொடு பனிமதி நுதலியை
    யெடுத்துநா ணுரைத்த லிசையாமை கூறல்
    செவ்வியில ளென்றல் சேட்பட நிறுத்த
    லவ்வினிய மொழிநீ யவட்குரை யென்றல்
    குலமுறை கிளத்தல் கோதண் டத்தொழில்
    வலிசொல்லி மறுத்தன் மற்றவற் கிரங்கல்
    சிறப்பின்மை கூறல் சிறியளென் றுரைத்தன்
    மறைத்தமை கூறி நகைத்துரை செய்த
    னகைகண்டு மகிழ்த னானவ டன்னை
    யறியே னென்ற லவயவங் கூறல்
    கண்ணயந் துரைத்தல் கையுறை யெதிர்தன்
    முகம்புக வுரைத்தன் முகங்கொண்டு கூறல்
    வகுத்து ரைத்தலொடு வண்டழை யவட்கு
    மிகுத்துரை செய்து விரும்பிக் கொடுத்த
    றழைவிருப் புரைத்த றானிரு பத்தா
    றிழைவளர் முலையா யிவைசேட் படையே.

_____________________________________________________________

    சேட்படை - இதன் பொருள்: தழைகொண்டுசேறல், சந்தனத் தழைதகாதென்று மறுத்தல், நிலத்தின்மைகூறிமறுத்தல், நினைவறிவு கூறிமறுத்தல், படைத்துமொழியான் மறுத்தல், நாணுரைத்து மறுத்தல், இசையாமை கூறி மறுத்தல், செவ்வியிலளென்று மறுத்தல், காப்புடைத்தென்று மறுத்தல், நீயேகூறென்று மறுத்தல், குலமுறைகூறி மறுத்தல், நகையாடி மறுத்தல், இரக்கத்தொடு மறுத்தல், சிறப்பின்மை கூறிமறுத்தல்