பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
243

12

சேட் படை

12.1 தழைகொண்டுசேறல்

   
தழைகொண்டுசேறல் என்பது மேற்சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச்சென்று, அவளது குறிப்பறிந்து பின்னுங் குறையுறவு தோன்றநின்று, நும்மாலருளத்தக்காரை அலையாதே இத்தழை வாங்கிக்கொண்டு என்குறை முடித்தருளு வீரா மென்று, மறுத்தற்கிடமற, சந்தனத்தழைகொண்டு தலை மகன் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

90. தேமென் கிளவிதன் பங்கத்
        திறையுறை தில்லையன்னீர்
   பூமென் தழையுமம் போதுங்கொள்
        ளீர்தமி யேன்புலம்ப
   ஆமென்றருங்கொடும் பாடுகள்
        செய்துநுங் கண்மலராங்
   காமன் கணைகொண் டலைகொள்ள
        வோமுற்றக் கற்றதுவே.

90

___________________________________________________________

இளமைகூறி மறுத்தல், மறைத்தமைகூறி நகைத்து ரைத்தல், நகை கண்டுமகிழ்தல், அறியாள் போன்று நினைவுகேட்டல், அவயவங் கூறல், கண்ணயந்துரைத்தல், தழையெதிர்தல், குறிப்பறிதல், குறிப்பறிந்துகூறல், வகுத்துரைத்தல், தழையேற்பித்தல், தழைவிருப்புரைத்தல் எனவிவையிருபத்தாறும் சேட்படையாம் எ-று. அவற்றுள்-

12.1  கொய்ம்மலர்க் குழலி குறைந யந்தபின்
     கையுறை யோடு காளை சென்றது.

   
இதன் பொருள்: தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் - தேன்போலும் மெல்லிய மொழியையுடை யாடனது கூற்றையுடைய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் - யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய பூக்களையுங் கொள்கின்றிலீர்; தமியேன் புலம்ப அருங் கொடும்பாடுகள் ஆம் என்று செய்து - உணர்விழந்த யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகு மென்று துணிந்து செய்து; நும் கண் மலர் ஆம் காமன் கணை கொண்டு அலை கொள்ளவோ முற்றக் கற்றது-நுங் கண்மலராகின்ற காமன் கணை