பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
244

12

சேட் படை

12.2 சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்

   
சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் என்பது தலைமகன் சந்தனத்தழைகொண்டு செல்ல, அது வழியாக நின்று, சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறென்னோவென்று ஆராயப்படுதலான் இத்தழை எமக்காகாதெனத் தோழி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்.

91. ஆரத் தழையராப் பூண்டம்
        பலத்தன லாடியன்பர்க்
   காரத் தழையன் பருளிநின்
        றோன்சென்ற மாமலயத்
   தாரத் தழையண்ணல் தந்தா
        லிவையவ ளல்குற்கண்டால்
   ஆரத் தழைகொடு வந்தா
        ரெனவரும் ஐயுறவே.

91

____________________________________________________________

கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்ட தில்லையோ!  எ-று.

    பங்கத்துறையிறை யென்பதூஉம் பாடம். தமியேன் புலம்ப வென்பதற்குத் துணையிலாதேன் வருந்தவெனினுமமையும். மேற்சேட்படை கூறுகின்றமையின் அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறவு கூறினான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல். அவ்வகை தோழிக்குக் குறைநேர்ந்த நேரத்துத் தலைமகன் கையுறையோடுஞ் சென்று இவ்வகை சொன்னானென்பது.

90

12.2.  பிறைநுதற் பேதையைக் குறைநயப் பித்தபின்
     வாட்படை யண்ணலைச் சேட்ப டுத்தது

   
இதன் பொருள்: ஆரத் தழை அராப் பூண்டு அம்பலத்து அனலோடி-ஆரமாகிய தழைந்த அரவைப் பூண்டு அம்பலத்தின்கண் அனலோடாடி; அன்பர்க்கு ஆரத் தழை அன்பு அருளி. நின்றோன்-அன்பராயினார்க்குத் தானும் மிக்க அன்பைப் பெருகச் செய்து நின்றவன்; சென்ற மா மலயத்து ஆரத் தழை அண்ணல் தந்தால்-சேர்ந்த பொதியின் மலையிடத்துளவாகிய சந்தனத் தழைகளை அண்ணல் தந்தால்; இவை அவள் அல்குற் கண்டால்-இத்தழைகளைப்