பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
245

12

சேட் படை

12.3 நிலத்தின்மைகூறி மறுத்தல்

   
நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது சந்தனத்தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென மற்றொருதழை கொண்டுசெல்ல, அதுகண்டு, இக்குன்றிலில்லாத தழையை எமக்கு நீர்தந்தால் எங்குடிக்கு இப்பொழுதே பழியாம்; ஆதலான் அத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

92. முன்றகர்த் தெல்லா விமையோரை
        யும்பின்னைத் தக்கன்முத்தீச்
   சென்றகத் தில்லா வகைசிதைத்
        தோன்றிருந் தம்பலவன்
   குன்றகத் தில்லாத் தழையண்
        ணறந்தாற் கொடிச்சியருக்
   கின்றகத் தில்லாப் பழிவந்து
        மூடுமென் றெள்குதுமே.

92

_____________________________________________________________

பிறர் அவளல்குற்கட் காணின்; அத் தழை கொடு வந்தார் ஆர் என ஐயுறவு வரும்-ஈண்டில்லாத அத்தழை கொண்டுவந்தார் யாவரென ஐயமுண்டாம்; அதனால் இவை கொள்ளேம் எ-று.

    ஆரத்தழையரா-பூண்டகாலத்து ஆரத்தழைத்த அரவெனினு மமையும். அன்பர்க்காரத் தழையன்பருளி நின்றோ னென்பதற்கு அன்பர்க்கு அவர் நுகரும்வண்ணம் மிக்க அன்பைக் கொடுத்தோனெனினுமமையும். அன்பான் வருங்காரியமேயன்றி அன்புதானும் ஓரின்பமாகலின் நுகர்ச்சியாயிற்று. அண்ணலென்பது ஈண்டு முன்னிலைக் கண் வந்தது. அத்தழையென்றது அம்மலயத் தழை என்றவாறு.

91

12.3.  கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
      எங்குலத் தாருக் கேலா தென்றது.


   
இதன் பொருள்: முன் எல்லா இமையோரையும் தகர்த்து -முன்வேள்விக்குச் சென்ற எல்லாத் தேவர்களையும் புடைத்து; பின்னைச் சென்று தக்கன் முத் தீ அகத்து இல்லாவகை சிதைத்தோன் - பின்சென்று தக்கனுடைய மூன்று தீயையும் குண்டத்தின்கண் இல்லையாம் வண்ணம் அழித்தவன்; திருந்து அம்பலவன் - திருந்திய வம்