பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
246

12

சேட் படை

12.4 நினைவறிவுகூறிமறுத்தல்

   
நினைவறிவுகூறி மறுத்தல் என்பது இத்தழை தந்நிலத்துக் குரித்தன் றென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென உட்கொண்டு, அந்நிலத்திற்குரிய தழைகொண்டு செல்ல, அதுகண்டு தானுடம் பட்டாளாய், யான் சென்று அவணினைவறிந்தால் நின்னெதிர்வந்து கொள்வேன்; அதுவல்லது கொள்ள அஞ்சுவேனென மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-

93. யாழார் மொழிமங்கை பங்கத்
        திறைவன் எறிதிரைநீர்
   ஏழா யெழுபொழி லாயிருந்
        தோன்நின்ற தில்லையன்ன
   சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
        வாய்நவ்வி சொல்லறிந்தால்
   தாழா தெதிர்வந்து கோடுஞ்
        சிலம்ப தருந்தழையே.

93

_______________________________________________________________

பலத்தையுடையான்; குன்றகத்து இல்லாத் தழை அண்ணல் தந்தால்-அவனுடைய இம்மலையிடத்தில்லாத தழையை அண்ணல் தந்தால்; கொடிச்சியருக்கு அகத்து இல்லாப் பழி இன்று வந்து மூடும் என்று எள்குதும்-கொடிச்சியருக்கு இல்லின்கண் இல்லாதபழி இன்று வந்து மூடுமென்று கூசுதும்; அதனால் இத்தழை கொணரற்பாலீரல்லீர் எ-று.

    குன்றகத்தில்லாத் தழையென்றது குறிஞ்சி நிலத்தார்க்கு உரிய வல்லாத தழை யென்றவாறு. அண்ணலென்பது முன்னிலைக் கண்ணும், கொடிச்சியரென்பது தன்மைக்கண்ணும் வந்தன. இல்லாவென்பது பாடமாயின், இல்லையாம் வண்ணம் முன்றகர்த்தென்றுரைக்க.

92

12.4.  மைதழைக் கண்ணி மனமறிந் தல்லது
     கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது.

    இதன் பொருள்:  யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன்-யாழோசைபோலும் மொழியையுடைய மங்கையது கூற்றையுடைய இறைவன்; எறி திரை நீர் ஏழ் ஆய் எழு பொழில் ஆய் இருந்தோன்-எறியாநின்ற திரையையுடைய கடலேழுமாய் ஏழுபொழிலு