12
சேட் படை
12.5 படைத்து மொழியான் மறுத்தல்
படைத்து மொழியான் மறுத்தல்
என்பது நினைவறிந்தல்லது ஏலேமென்று மறுத்துக்கூறியவாறன்று; நினைவறிந்தால் ஏற்பே மென்றவாறா மென
உட்கொண்டு நிற்ப, சிறிது புடை பெயர்ந்து அவணினைவறிந்தாளாகச் சென்று, இத்தழை யானே யன்றி
அவளும் விரும்பும், ஆயினும் இது குற்றாலத்துத் தழையாதலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோவென்று
ஆராயப் படும்; ஆதலான் இத் தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
94. எழில்வா யிளவஞ்சி
யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.
94
_____________________________________________________________
மாயிருந்தவன்; நின்ற தில்லை
அன்ன சூழ் ஆர் குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் - அவனின்ற தில்லையை
ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக் கனிபோலும் எழிலையுடைய செவ்வாயினையுமுடைய நவ்வி
போல்வாளது மாற்ற மறிந்தால்; சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் - பின் சிலம்பனே
நீ தருந்தழையைத் தாழாது நின்னெதிர்வந்து கொள்வேம்; அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும்
எ-று.
சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து
முடித்தலெனினுமமையும் தில்லையன்ன நவ்வியெனவியையும்.
93
12.5. அருந்தழை மேன்மேற்
பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியிற்
றடுத்தவண் மொழிந்தது.
இதன் பொருள்:
எழில் வாய் இள வஞ்சியும்
விரும்பும்-நின்பாற்றழை கோடற்கு யானேயன்றி எழில் வாய்த்த இளைய வஞ்சியையொப்பாளும்
விரும்பும்; மற்று இறை குறை உண்டு-
|