பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
248

12

சேட் படை

12.6. நாணுரைத்துமறுத்தல்

   
நாணுரைத்து மறுத்தல் என்பது பலபடியுந் தழைகொண்டு செல்ல மறுத்துக்கூறியவழி, இனித் தழையொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டுசென்றால் அவள் மறுக்கும் வகையில்லை யெனக் கழுநீர்மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல, அதுகண்டு, செவிலியர் சூட்டிய கண்ணியின் மேல் யானொன்று சூட்டினும் நாணாநிற்பள்; நீர்கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனஞ் சூடுமெனத் தலைமகள் நாணுரைத்து மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

95. உறுங்கண்ணி வந்த கணையுர
        வோன்பொடி யாயொடுங்கத்
   தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
        வன்மலைச் சிற்றிலின்வாய்

___________________________________________________________

ஆயினுஞ் சிறிது குறையுண்டு; அழல்வாய்; அவிர் ஒளி -அழலிடத்துளதாகிய விளங்கு மொளியாயுள்ளான்;  அம்பலத்து ஆடும் அம்சோதி - அம்பலத்தின்கணாடும் அழகிய சோதி;  அம் தீம் குழல் வாய் மொழி மங்கை பங்கன் - அழகிய வினிய குழலோசை போலும் மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்;  குற்றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் - அவனது குற்றாலத்தின் கணுளதாகிய அழகையுடைய அசோகப்பொழில் வாய்த்த;  தடவரைவாய் அல்லது இப் பூந் தழை இல்லை - பெரிய தாள் வரையிடத்தல்லது வேறோரிடத்து இப்பூந்தழையில்லை;  அதனால் இத்தழை இவர்க்கு வந்தவாறென்னென்று ஆராயப்படும், ஆதலான் இவை கொள்ளேம் எ-று.

    இத்தழையை யிளவஞ்சியும் விரும்பு மெனினுமமையும். அவிரொளியையுடைய அஞ்சோதியென்றியைப் பினுமமையும். பிறவிடத்து முள்ளதனை அவ்விடத்தல்லது இல்லை யென்றமையின், படைத்துமொழியாயிற்று.

94

12.6.  வாணுதற் பேதையை
     நாணுத லுரைத்தது.


   
இதன் பொருள்: நிவந்த உறும் கள் கணை உரவோன் பொடியாய் ஒடுங்க - எல்லார்கணையினும் உயர்ந்த மிகுந்த தேனையுடைய