நறுங
சேட் படை
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே.
95
_____________________________________________________________
மலர்க்கணையையுடைய பெரிய வலியோன்
நீறாய்க்கெட; தெறும்கண் நிவந்த சிற்றம்பலவன்-தெறவல்ல கண்ணோங்கிய சிற்றம்பலவனது; மலைச்
சிற்றிலின் வாய்-மலைக்கணுண்டாகிய சிற்றிலிடத்து; நறுங் கண்ணி சூடினும் என் வாணுதல் நாணும்-செவிலியர்
சூட்டிய கண்ணிமேல் யானோர் நறுங்கண்ணியைச் சூட்டினும் அத்துணையானே என்னுடைய வாணுதல் புதிதென்று
நாணாநிற்கும்; இக் குன்றிடத்து நாகத்து ஒண் பூங்குறுங் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும்-மகளிரைச்
சொல்லுகின்றதென்! இக்குன்றிடத்து நாகமரத்தினது ஒள்ளிய பூக்களானியன்ற குறுங் கண்ணியைச்சூடி
அச்சூடுதலான் இளமந்திகளும் நாணாநிற்கும் எ-று.
கண்ணிவந்தவென்பதற்குக் கள்
மிக்க கணையெனினு மமையும். தெறுங்கண்ணிவந்தவென்றார், அக்கண் மற்றையவற்றிற்கு மேலாய்நிற்றலின்.
மேனோக்கி நிற்றலானெனினுமமையும்.
முதலொடு சினைக்கொற்றுமையுண்மையான்
நிவந்தவென்னும் பெயரெச்சத்திற்குச் சிற்றம்பலவனென்பது வினைமுதற் பெயராய் நின்றது. மந்திகணாணுமென்பது
பெயரெச்சமாக மலைக்கண் இக்குன்றிடத்துச் சிற்றிலின்வாயெனக் கூட்டியுரைப்பினு மமையும். இப்பொருட்குக்
குன்றென்றது சிறுகுவட்டை. யானொன்று சூட்டினும் நாணும் பெருநாணினாள் நீர்கொணர்ந்த இக்கண்ணியை
யாங்ஙனஞ் சூடுமென்பது கருத்து. நாணுதலுரைத்ததென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு இரண்டாவதனையமைத்தன.
95
|