12
சேட் படை
12.7 இசையாமை கூறி மறுத்தல்
இசையாமை கூறி மறுத்தல் என்பது
தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க யாங்கள் வேங்கைமலரல்லது தெய்வத்திற்குரிய வெறிமலர்சூட
அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி எங்குலத்திற் கிசையாதென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
96. நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே.
96
____________________________________________________________
12.7. வசைதீர் குலத்திற்
கிசையா தென்றது.
இதன் பொருள்: நற மனை வேங்கையின்
பூ பயில் பாறையை நாகம் நண்ணி-தேனிற்கிடமாகிய வேங்கைப் பூக்கள் பயின்ற பாறையை யானை சென்றணைந்து;
மறம் மனைவேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா-அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று
மிகவுமஞ்சும் மஞ்சாருஞ் சிலம்பையுடையாய்; நிறம் மன்வேங்கை அதள் அம்பலவன் நெடுவரை-நிறந்தங்கிய
புலி யதளையுடைய அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ-குறவர்
மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக்
கூட்டுவரோ? கூட்டார் எ-று.
நறமனைவேங்கை யென்பதற்கு
நறாமிக்கபூ வெனினுமமையும். குறமனை கூட்டுபவோ வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோ வென்றுரைப்பாருமுளர்.
நிறமனையென்புழி ஐகாரம்; அசைநிலை; வியப்பென் பாருமுளர். நிறம் அத்தன்மைத்
|