பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
251

12

சேட் படை

12.8. செவ்வியிலளென்று மறுத்தல்

   
செவ்வியிலளென்று மறுத்தல் என்பது அணங்கலர் தங்குலத்திற் கிசையாதென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென மாந்தழையோடு மலர் கொண்டுசெல்ல, அவை கண்டு உடம்படாளாய், அன்னம் பிணை கிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றனவில்லை; அதுகிடக்க என்னுழை நீர்வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்வி பெற்றாற் கொணருமென மறுத்துக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

97. கற்றில கண்டன்னம் மென்னடை
        கண்மலர் நோக்கருளப்
   பெற்றில மென்பிணை பேச்சுப்
        பெறாகிள்ளை பிள்ளையின்றொன்

____________________________________________________________

தாகிய அதளெனினுமமையும். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கு நாடனாதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தாயென்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாத தனையும் அஞ்சும் நிலமாகலான் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாமஞ்சுதல் சொல்லவேண்டுமோ வென்பது இறைச்சியெனினுமமையும். இப்பொருட்கு ஒருநிலத்துத் தலைமகளாகக் கொள்க. வேங்கைபூவிற்குச் சுணங்கணிந்திருத்தல் குணமாதலால் சுணங்கணியப்பட்டதனைச் சுணங்கென்றே கூறினாள்.

96

12.8.  நவ்வி நோக்கி
     செவ்வியில ளென்றது.


   
இதன் பொருள்: கண்டு அன்னம் மெல் நடை கற்றில - புடைபெயர்ந்து விளையாடாமையின் நடைகண்டு அன்னங்கள் மெல்லிய நடையைக் கற்கப்பெற்றனவில்லை;  கண் மலர் நோக்கு அருள மென்பிணை பெற்றில -தம்மாற் குறிக்கப்படுங் கண்மலர் நோக்குகளை அவள் கொடுப்ப மென்பிணைகள் பெற்றனவில்லை. பேச்சுக் கிள்ளை பெறா-உரையாடாமையின் தாங் கருது மொழிகளைக் கிளிகள் பெற்றனவில்லை; பிள்ளை இன்று ஒன்று உற்றிலள்-இருந்தவாற்றான் எம்பிள்ளை இன்றொரு விளையாட்டின்கணுற்றிலள்;  ஆகத்து ஒளிமிளிரும் புற்றில வாள் அரவன்-