பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
252

றுற

சேட் படை

    றுற்றில ளுற்ற தறிந்தில
        ளாகத் தொளிமிளிரும்
    புற்றில வாளர வன்புலி
        யூரன்ன பூங்கொடியே.

97

___________________________________________________________

அதுவேயுமன்றி ஆகத்தின் கட்கிடந்தொளி விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது; புலியூர் அன்ன பூங்கொடி - புலியூரையொக்கும் பூங்கொடி; உற்றது அறிந்திலள்-என்னுழை நீர் வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்விபெற்றுச் சொல்லல் வேண்டும் எ-று.

    கண்டென்பது கற்றலோடும், அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன. புற்றிலவென்பதற்கு வேள்வித்தீயிற் பிறந்து திருமேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென்றுரைப்பினு மமையும். ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை யேழிற்கும் மெய்ப்பாடு:  அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடுமென்னும் அச்சமும் முடிக்கக் கருதலிற் பெருமிதமுமாயிற்று.

   
பயன்: செவ்விபெறுதல். மேற்றலைமகளைக் குறைநயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய கூட்டங் கூட்டலுறுந்தோழி தலைமகன் றெருண்டு வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக முன்னர் விண்ணிறந்தார் (தி.8 கோவை பா. 107) என்னும் பாட்டீறாக இவையெல்லாங்கூறிச் சேட்படுத்தப்பெறுமென்பது.

97