பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
253

12

சேட் படை

12.9 காப்புடைத்தென்றுமறுத்தல்

   
காப்புடைத்தென்று மறுத்தல் என்பது செவ்வியிலளென்றது செவ்விபெற்றாற் குறையில்லையென்றாளாமென உட்கொண்டு நிற்ப, கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து; நும்மிடமுஞ் சேய்த்து; எம்மையன்மாருங் கடியர்; யாந்தாழ்ப்பின் அன்னையு முனியும்; நீரும் போய் நாளைவாருமென இசையமறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-

98. முனிதரு மன்னையும் மென்னையர்
        சாலவும் மூர்க்கரின்னே
   தனிதரு மிந்நிலத் தன்றைய
        குன்றமுந் தாழ்சடைமேற்

________________________________________________

12.9.  காப்புடைத் தென்று
     சேட்ப டுத்தது.


   
இதன் பொருள்: சுடர்க் கொற்றவன் - சுடர்களுட்டலைவன்; தாழ்சடைமேல் பனிதருதிங்கள் அணி அம்பலவர் - தாழ்ந்த சடைமேற் குளிர்ச்சியைத்தருந் திங்களைச் சூடிய அம்பலவர்; பகை செகுக்கும் குனிதரு திணிசிலைக் கோடு சென்றான்-பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய சிலையாகிய மேருவினது கோட்டையடைந்தான்; அன்னையும் முனிதரும் -இனித் தாழ்ப்பின் அன்னையும் முனியும்; என்னையர் சாலவும் மூர்க்கர் -என்னையன்மாரும் மிகவும் ஆராயாது ஏதம் செய்யும் தன்மையர்; இன்னே தனி தரும்-இவ்விடமும் இனியியங்குவாரின்மையின் இப்பொழுதே தனிமையைத் தரும்; ஐய-ஐயனே; குன்றமும் இந்நிலத்து அன்று - நினது குன்றமும் இந்நிலத்தின் கண்ணதன்று; அதனால் ஈண்டுநிற்கத் தகாது எ-று.

    அம்பலவர் பகைசெகுத்தற்குத் தக்க திண்மை முதலாகிய இயல்பு அதற்கெக்காலத்து முண்மையால், செகுக்குமென நிகழ்காலத்தாற் கூறினார். இந்நிலைத்தன்றென்பது பாடமாயின், இக்குன்றமும் இவ்வாறு மகளிரும் ஆடவருந் தலைப்பெய்து சொல்லாடு நிலைமைத் தன்றெனவுரைக்க. மெய்ப்பாடும் பயனும் அவை. இவ்விடம் மிக்க காவலையுடைத்து இங்குவாரன்மினென்றாளென, இவ்விடத்தருமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணையும் பரிவுடையாள் எனதாற்றாமைக் கிரங்கி முடிக்குமென ஆற்றுமென்பது.

98