பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
254

பன

சேட் படை

    பனிதரு திங்க ளணியம்
        பலவர் பகைசெகுக்குங்
    குனிதரு திண்சிலைக் கோடுசென்
        றான்சுடர்க் கொற்றவனே.

98

12.10 நீயேகூறென்றுமறுத்தல்

   
நீயே கூறென்று மறுத்தல் என்பது இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமை யில்லையெனத் தலைவன் உட்கொண்டு போய்ப் பிற்றைஞான்று செல்ல, தோழி யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்துசொல்ல மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறையுள்ளது சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

99. அந்தியின் வாயெழி லம்பலத்
        தெம்பரன் அம்பொன்வெற்பிற்
   பந்தியின் வாய்ப்பல வின்சுளை
        பைந்தே னொடுங்கடுவன்

__________________________________________________________

12.10.  அஞ்சுதும் பெரும பஞ்சின் மெல்லடியைக்
      கூறுவ நீயே கூறு கென்றது.


   
இதன் பொருள்: அந்தியின்வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம்பொன் வெற்பில் - அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெழிலையுடைய அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியின்வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை - பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும் பலாச்சுளையை; கடுவன் மந்தியின்வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப - கடுவன் மந்தியினது வாயில் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; மனம் கனிய முந்தி இன் வாய்மொழி அம் மொய் குழற்கு நீயே சென்றுமொழி - அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ-று.

   
எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும் எமக்கண்ணிய