பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
256

பங

சேட் படை

    பங்கம் பலவன் பரங்குன்றிற்
        குன்றன்ன மாபதைப்பச்
    சிங்கந் திரிதரு சீறூர்ச்
        சிறுமியெந் தேமொழியே.

100

12.12 நகையாடிமறுத்தல்

   
நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறைகிளத்தலான் மறுத்துக் கூறியவாறன்றென மனமகிழ்ந்துநிற்ப, இனியிவனாற்றுவானென உட்கொண்டு, பின்னுந்தழையெதிராது; எம்மையன் மாரேவுங்கண்டறிவேம்; இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற்றிண்ணியது கண்டறியேமென அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

101. சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
        றம்பல வன்கயிலை
    மலையொன்று மாமுகத் தெம்மையர்
        எய்கணை மண்குளிக்குங்

___________________________________________________________

குளிர்நாட்டினை நீ - பூந்தாதையுடைய பழனத்துக்கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய்நீ; எம் தேமொழி - எம்முடைய தேமொழி; உமை கூர் பங்கு அம்பலவன் பரங்குன்றில் உமை சிறந்த பாகத்தை உடைய அம்பலவனது பாங்குன்றிடத்து - குன்று அன்ன மா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி; மலைபோலும் யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டந்திரியுஞ் சீறூர்க்கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது எ-று.

    நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாகவுடையையென இரண்டாவதன் பொருள்பட உரைப்பினுமமையும். பரங்குன்றிற் சீறூரெனவியையும். பெருங்காட்டிற் சிறுகுரம்பை யென்பது போதர, சிங்கந் திரிதரு சீறூரென்றாள். மெய்ப்பாடும் பயனும் அவை.

100

12.12  வாட்டழை யெதிராது சேட்படுத் தற்கு
      மென்னகைத் தோழி யின்னகை செய்தது.


    இதன் பொருள்: 
சிலை ஒன்று வாணுதல் பங்கன் - சிலையை யொக்கும் வாணுதலையுடையாளது கூற்றையுடையான்; சிற்றம்பலவன் - சிற்றம்பலவன்; கயிலை மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய்கணை மண் குளிக்கும்-அவனது கயிலைக்கண் மலையை