க
சேட் படை
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய
வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே.
101
12.13 இரக்கத்தொடு மறுத்தல்
இரக்கத்தொடு மறுத்தல் என்பது இவள்
என்னுடனே நகையாடுகின்றது தழைவாங்குதற்பொருட்டென உட்கொண்டு நிற்ப, பின்னையுந் தழையேலாது,
இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையாநிற்றற்குக் காரணமென்னோ வென்று அதற்கிரங்கி மறுத்துக்கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
102. மைத்தழை யாநின்ற
மாமிடற்
றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
___________________________________________________________
யொக்கும் யானை முகத்து எம்மையன்மார்
எய்யுங்கணை அவற்றையுருவி மண்ணின்கட்குளிப்பக்காண்டும்; கலை ஒன்று வெம்கணையோடு கடுகிட்டது என்னில்
- அவ்வாறன்றி ஒருகலை இவரெய்த வெய்ய வம்பினோடு விரைந்தோடிற்றாயின்; ஐயர் கையில்
கொடுஞ் சிலைகெட்டேன் கொலை ஒன்று திண்ணிய ஆறு-இவ்வையர் கையில் வளைந்த சிலை, கெட்டேன்,
கொலையாகிய வொன்று திண்ணிய வாறென்! எ-று.
கயிலைக்கண் மண்குளிக்குமென வியையும்.
கொடுஞ்சரமென்பதூஉம் பாடம்.
101
12.13. கையுறை யெதிராது காதற்
றோழி
யைய நீபெரி தயர்த்தனை
யென்றது.
இதன் பொருள்: மை
தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே-கருமை மிகாநின்ற கரியமிடற்றையுடைய அம்பலவனது கழற்கண்ணே;
தழையாநின்ற மெய் அன்பினர் போல விதிர் விதிர்த்து - பெருகாநின்ற மெய்யன்பை யுடையவரைப்
போல மிகநடுங்கி; கை தழை ஏந்தி-கைக்கண்ணே தழையை ஏந்தி; கடமா வினாய்-இதனோடு மாறுபடக்
கடமாவை வினாவி; கையில் வில்
|