New Page 1
சேட் படை
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில்
வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.
102
12.14 சிறப்பின்மை கூறிமறுத்தல்
சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது
என் வருத்தத்திற்குக் கவலாநின்றனள் இவளாதலின் எனக்கிது முடியாமையில்லையென உட்கொண்டுநிற்ப,
தோழி இக்குன்றிடத்து மாவுஞ் சுனையும் இவள் வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா, ஆதலான் ஈண்டில்லாதனவற்றை
யாமணியிற் கண்டார் ஐயுறுவரென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
103. அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
____________________________________________________________
இன்றியே-தன்கையில்
வில்லின்றியே; பெரியவர் பித்தழையா நிற்பர்-இப்பெரியவர் பித்தழையாநின்றார்; என்ன பாவம்
- இஃதென்ன தீவினையோ! எ-று.
மா-கருமை. மாமிடறென்பது, பண்புத்
தொகையாய் இன்னதிதுவென்னுந் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்றவென்பது அக்கருமையது மிகுதியை
உணர்த்தி நிற்றலானும், கூறியது கூறாலாகாமையறிக. அது “தாமரைமீமிசை” எனவும், “குழிந்தாழ்ந்த
கண்ண” (நாலடியார். தூய்தன்மை - 9) எனவும் இத்தன்மை பிறவும் வருவனபோல. மெய்த்தழையாநின்ற
வன்பென்பதற்கு மெய்யாற்றழையாநின்ற அன்பெனினுமமையும். பித்தென்றது ஈண்டுப் பித்தாற் பிறந்த
அழைப்பை. அழைப்பு - பொருள் புணராவோசை.
102
12.14 மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தலிம்மலை யில்லையென்றது.
இதன் பொருள்: மஞ்சு
ஆர் சிலம்பா - மஞ்சார்ந்த சிலம்பை யுடையாய்; அக்கும் அரவும் அணி மணிக் கூத்தன் சிற்றம்பலம்
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி-அக்கையும் அரவையும் அணியும் மாணிக்கம்போலுங் கூத்தனது சிற்றம்பலத்தை
யொக்கும்
|