பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
259

New Page 1

சேட் படை

    கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
        ருங்கொழும் போதுகளும்
    இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
        யாத வியல்பினவே.

103

12.15 இளமை கூறிமறுத்தல்

   
இளமை கூறி மறுத்தல் என்பது அவளது வடிவுக்கஞ்சி மலர்ந்தறியாவென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்று; சிறப்பின்மை கூறியவாறென உட்கொண்டு, சிறப்புடைத் தழைகொண்டு செல்ல, அதுகண்டு, குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிதுமியைபுடைத் தன்றென அவளதிளமை கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

104. உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
        அம்பலத் தும்மொளியே
   பெருகு தலைச்சென்று நின்றோன்
        பெருந்துறைப் பிள்ளைகள்ளார்

_____________________________________________________________

இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி; கொக்கும் சுனையும் - மாக்களுஞ் சுனைகளும்; குளிர் தளிரும் கொழும் போதுகளும் - குளிர்ந்த தளிர்களுங் கொழுவிய போதுகளும்; இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பின-இக்குன்றில் எக்காலத்தும் விரிந்தறியாத தன்மையையுடைய; அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர் எ-று.

    தளிர்மலர்ந்தறியாத வென்னுஞ் சினைவினை முதன்மேலேறியும், போது மலர்ந்தறியாத வென்னும் இடத்துநிகழ்பொருளின் வினை இடத்துமேலேறியும் நின்றன.

103

12.15.  முளையெயிற் றரிவை
      விளைவில ளென்றது.


   
இதன் பொருள்:  உருகுதலைச் சென்ற உள்ளத்தும் - அன்பருடைய உருகுதலையடைந்த உள்ளத்தின்கண்ணும்; அம்பலத்தும் - அம்பலத்தின் கண்ணும்; ஒளி பெருகுதலைச் சென்று நின்றோன் - இரண்டிடத்துமொப்ப ஒளிபெருகுதலையடைந்து நின்றவனது;