பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
269

சேட் படை

    உழைகாண் டலும்நினைப் பாகுமென்
        நோக்கிமன் நோக்கங்கண்டால்
    இழைகாண் பணைமுலை யாயறி
        யேன் சொல்லும் ஈடவற்கே.

111

______________________________________________________________

காண்பன் - கையிற் றழையைக் காண்டலும் அப்பொழுது சொல்லத்தகும் பொய்யை முன்பெருகக் காண்பேன்; அம்பலத்தான் உழைகாண்டலும் நினைப்பு ஆகும் மெல் நோக்கி-அம்பலத்தானுடைய கையிலுழைமானைக் காண்டலும் நினைவுண்டாம் மெல்லிய நோக்கத்தை யுடையாய்; மன் நோக்கம் கண்டால் -அம்மன்னனுடைய புன்கணோக்கத்தைக் கண்டால், இழை காண் பணை முலையாய்; இழைவிரும்பிக் காணப்படும் பெரிய முலையையுடையாய்; இன்று அவற்குச் சொல்லும் ஈடு அறியேன் - இன்று அவற்குப் பொய்சொல்லுநெறி யறிகின்றிலேன்; இனி யாது செய்வாம்? எ-று.

   
குத்துகோல் வரைத்தன்றி யானை களிவரைத்தாயினாற் போலக் கழறுவார் சொல்வயத்தனன்றி வேட்கை வயத்தனா யினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை யன்னா னென்றாள். ஈண்டுக்கழறுவாரென்றது தோழி தன்னை. அதாவது கையுறை பலவற்றையும் ஆகாவென்று தான் மறுத்ததனை நோக்கி. தலைமகளை முகங்கோடற்கு இழைகாண் பணை முலையா யெனப் பின்னும் எதிர்முகமாக்கினாள். தழையெதிர்ந்தாளாயினும் தலைமகளது குறிப்பறியாமையின், அவனைக் கண்டிலள்போலக் கண்டாலென எதிர்காலத்தாற் கூறினாள். இதனை முகம்புகவுரைத்தல் எனினும் குறிப்பறிதல் எனினுமொக்கும்.

111