இன
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
ஆசியுரை
இன்னோரன்ன கருத்துக்களையெல்லாம்
ஒருங்கு திரட்டித் தமது திருக்கோவையார் என்னும் அருள்நூலில் மாணிக்கவாசகர் அருளியுள்ளதை இனிக்
கண்டு மகிழலாம்.
வாசகம் - கோவை:
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள்
எட்டாம் திருமுறை, திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரு பிரிவுகளை உடையது. இவற்றை
அருளிச் செய்தவர் மணிவாசகப் பெருமான் ஆவார்.
திருவாசகம் தோத்திரமாக
விளங்குவது. திருக்கோவையார் தனிப் பிரபந்த இலக்கிய அமைப்பில் திகழ்வது.
திருக்கோவையார்:
மணிவாசகர் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது
தில்லைப் பெருமான் அந்தணராக அவர்முன் சென்று திருவாசகத்தைச் சொல்லக் கேட்டுத்தம் திருக்கையால்
எழுதிக்கொண்டதோடு “பாவை பாடிய நும் வாயால் ஒரு கோவை பாடுக” எனக் கேட்க, மணிவாசகர்
அருளிச் செய்த தெய்வப் பனுவல் திருக்கோவையார் ஆகும். இந்நூல் தில்லையைப் போற்றும் முறையில்
அமைந்த அகத்திணைக் கோவை ஆதலின் திருச்சிற்றம்பலக்கோவையார் எனப்பெற்றது. சிவபிரானைப்
பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற நூல் ஆதலின் இக்கோவை நூல், “திரு” என்ற அடைமொழியையும்
உயர்திணைப் பலர்பால் விகுதியாகிய “ஆர்” என்பதனையும் பெற்று திருக்கோவையார் என வழங்கப்
பெறுகிறது.
பிரபந்த விளக்கம்:
கோவை என்னும் பிரபந்தம் அகப்பொருளில்
ஐந்திணை ஒழுகலாறுகளைத் தெரிவிப்பது. பல பிறவிகளில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அன்புடையார்
இருவர் வேறு வேறு இடங்களில் பிறந்தனராயினும் நல்லூழின் பயனாக ஓரிடத்து எதிர்ப்பட்டு, அன்பினால்
கூடிவாழும் இயல்பைக் கூறுவது. இவ்வைந்திணை ஒழுக்கம் களவு, கற்பு எனும் இரண்டு பிரிவுகள் கொண்டது.
இதனை வரிசைப்படுத்தி உரைக்கும் நூலே கோவையாகும்.
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பெருள்
முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத்தாகி
நலனுறு கலித்துறை நானூ றாக
|