ஆற
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
ஆசியுரை
ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி
விளங்கக்
கூறுவ தகப்பொருட் கோவையாகும்.
- இலக்கண விள. பா. 56
என்பது கோவைக்குரிய இலக்கண
விளக்கப்பாட்டியல் நூற்பா. கோவையில் பாட்டுடைத் தலைமகன் பெயரைக் கூறலாம். கிளவித்
தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி பெயர்களைக் கூறுதல் கூடாது என்பது விதி.
கோவைப் பிரபந்தம் பாடுவோர்
பாட்டுடைத் தலைவனின் பெயர் அவனது வீரம் கொடை முதலான பண்புகளைக் கூறுவர். இவ்வகையில் எழுந்தவை
பாண்டிக் கோவை, அம்பிகாபதிக் கோவை, தஞ்சைவாணன் கோவை முதலியனவாகும்.
மணிவாசகர் திருச்சிற்றம்பலமுடையானைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவன் புகழைக் கூறும் நிலையில் இப்பிரபந்தத்தை அருளியுள்ளார்.
இக்கோவையில் கூறப்படும் கிளவித்தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி யாவரும் தில்லைப்
பெருமானிடம் பத்திமை உடையவர்கள் ஆதலின் அவர்கள் கூற்றுக்கள் யாவும் சிவன் புகழ்பேசும் செம்மையினவாகவே
அமைகின்றன.
பாவையும் கோவையும்:
பெரிய புராணத்தில் நங்கை பரவையாரைக்
கண்ட சுந்தரர் “பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ அற்புதமோ சிவன் அருளோ” (தி.12 தடுத்.
பா.140) என ஐயுறுவதையும், அவ்வாறே பரவையாரும் சுந்தரரைக் கண்டு “மின்னேர் செஞ்சடையண்ணல் மெய்யருள்
பெற்றுடையவனோ” (தி.12 தடுத். பா. 144) எனக் கூறுவதையும் காணலாம். மணிவாசகர், திருவெம்பாவையில்
“உன்அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்னபடியே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்னவகையே ”எமக்கு எங்கோன் நன்குதி” (தி.8 திருவெம்பாவை
பா. 9) எனக் கன்னிப் பெண்கள் இறைவனை வேண்டுதலைக் கூறியருள்கிறார். அதனால் தான் போலும்
‘பாவைபாடிய வாயால் கோவைபாடுக’ என இறைவன் கேட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.
பாத்திரங்களின் பக்தி:
தலைவன்,
|