பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
273

அவ

சேட் படை

    அவ்வரை மேலன்றி யில்லைகண்
        டாயுள்ள வாறருளான்
    இவ்வரை மேற்சிலம் பன்னெளி
        திற்றந்த ஈர்ந்தழையே.

114

_____________________________________________________________

யிடத்தல்லது பிறிதோரிடத்தில்லை; இதனைக் கொள்வாயாக எ-று.

    உள்ளவாறென்பது யான் கூறிய இது மெய்ம்மை யென்றவாறு.

    தெவ்வரை மெய் எரிகாய்சிலை ஆண்டு-பகைவரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணி கொண்டு; என்னை ஆண்டு கொண்ட-பின் என்னை யடிமை கொண்ட; செவ்வரை மேனியன் சிற்றம்பலவன் செழுங்கயிலை-செவ்வரைபோலுந் திருமேனியையுடையனாகிய சிற்றம்பல வனது செழுங்கைலையெனக் கூட்டுக.

   
மெய் எரியென்பன ஒருசொல்லாய்த் தெவ்வரையென்னும் இரண்டாவதற்கு முடிபாயின. மெய்யெரித்த காய்சிலை மெய்யெரி காய்சிலையென வினைத்தொகையாயிற்று. காய்சிலை; சாதியடை. ஐகாரத்தை அசைநிலையாக்கித் தெவ்வர் மெய்யெரித்தற்குக் காரணமாஞ்சிலையெனினு மமையும். வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னையாண்டா னென்பது போதர, காய் சிலையாண் டென்னை யாண்டுகொண்ட வென்றார். என்னைத் தனக்கடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக்கல்லை வளைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொருபகை யுண்டாய்ச் செய்ததன்றுபோலும்   என்பது கருத்து. “கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற் கன்பனாக்கினாய்” (தி.8 திருச்சதகம் பா. 94) என்பதுமது. கயிலைத் தழையை எளிதிற்றந்தா னென்றதனான் வரைவு வேண்டியவழித் தமர்மறுப்பின் வரைந்து கொள்ளுந் தாளாண்மையனென்பது கூறினாளாம். கண்டாயென்பது: முன்னிலையசைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: கையுறையேற்பித்தல்.

114