பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
275

13


13. பகற்குறி

பகற்குறி என்பது தலைமகளைத் தழையேற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் பகற்குறிக்கட் டலைப்பெய்வியா நிற்றல். அது வருமாறு-

    குறியிடங் கூற லாடிடம் படர்தல்
    குறியிடைச் சேற லிடத்துய்த்து நீங்க
    லுவந்துரைத் தலொடு மருங்கணை தல்லே
    யறிவறி வத்த லவனுண் மகிழ்த
    லாயத் துய்த்த றோழிவந்து கூட
    லாடிடம் புகுத றனிகண் டுரைத்த
    றடமென் முலையாள் பருவங் கூறி
    வரவு விலக்கல் வரைவுடம் படாது
    மிகுத்துரைத் தலொடு மெய்ம்மை யுரைத்தல்
    வருத்தங் கூற றாயச்சங் கூற
    லிற்செறி வறிவித்த றமர்நினை வுரைத்த
    லெதிர்கோள் கூற லேறுகோள் கூற
    லேதிலார் தம்முரை கூற லவளொடு
    கூறுவாள் போன்று தினைமுதிர் வுரைத்தல்
    பகல்வரல் விலக்கல் பையு ளெய்தித்
    தினையொடு வெறுத்தல் சிறைப்புற மாக
    வேங்கையொடு வெறுத்தல் வெற்பமர் நாடற்குக்
    கழுமலுற் றிரங்கல் கடிப்புனங் கையறக்
    கொய்தமை கூறல் பிரிவருமை கூறன்
_______________________________________________

    பகற்குறி - இதன் பொருள்: குறியிடங் கூறல், ஆடிடம்படர்தல் குறியிடத்துக் கொண்டுசேறல்., இடத்துய்த்து நீங்கல், உவந்துரைத்தல், மருங்கணைதல், பாங்கியறிவுரைத்தல், உண்மகிழ்ந்துரைத்தல், ஆயத்துய்த்தல், தோழி வந்துகூடல், ஆடிடம்புகுதல், தனி கண்டுரைத்தல், பருவங்கூறி வரவுவிலக்கல், வரைவுடம்படாது மிகுத்துக்கூறல், உண்மை கூறி வரைவுகடாதல், வருத்தங்கூறி வரைவுகடாதல், தாயச்சங்கூறி வரைவுகடாதல், இறிசெறிவறி வித்து வரைவுகடாதல், தமர்நினைவுரைத்து வரைவுகடாதல், எதிர்கோள் கூறி வரைவு கடாதல், ஏறுகோள்கூறி வரைவுகடாதல், அயலுரை யுரைத்து வரைவு கடாதல், தினைமுதிர்வுரைத்து  வரைவுகடாதல், பகல்வரல்விலக்கி வரைவுகடாதல், தினையொடு வெறுத்து வரைவுகடாதல், வேங்கையொடுவெறுத்து வரைவுகடாதல், இரக்கமுற்று வரைவுகடாதல்