மய
பகற்
குறி
மயிலொடு கூறல் வறும்புனங் காண்டல்
பயில்பதி நோக்கிப் பதிமிக வாடல்
சொன்னநா லெட்டுந் தோன்று மியற்கை
மன்னிய பகற்குறி வகையா கும்மே.
13.1 குறியிடங் கூறல்
குறியிடங் கூறல் என்பது
தழைவிருப்புரைத்த தோழி ஆங்கவள் விளையாடுமிடத்து ஒரு கரியபொழில் கதிரவன் நுழையாவிருளாய்
நடுவண் ஒரு பளிக்குப் பாறையையுடைத்தாயிருக்கும்; அவ்விடத்து வருவாயாகவென்று தலைமகனுக்குக்
குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
116. வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர்
கார்ப்பொழிலே.
116
____________________________________________________________
கொய்தமைகூறி வரைவுகடாதல்,
பிரிவருமை கூறிவரைவுகடாதல், மயிலொடுகூறி வரைவுகடாதல், வறும்புனங்கண்டு வருந்தல், பதிநோக்கி
வருந்தல் எனவிவை முப்பத்திரண்டும் பகற்குறியாம். என்றவாறு.
13.1. வாடிடத் தண்ணல் வண்தழை
யெதிர்ந்தவள்
ஆடிடத் தின்னியல் பறிய
வுரைத்தது.
இதன் பொருள;
ஓர் கார்ப்பொழில்
- ஒரு கரிய பொழில்; புறம் வெய்யோன் தான் நுழையா இருளாய் - புறமெங்குங் கதிரோன்றான்சென்று
நுழையாதவிருளாய்; நாப்பண் வண் தாரகை போல் தேன் நுழை நாகம் மலர்ந்து - நடுவண் வளவிய
வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து ; திகழ் பளிங்கான் - திகழும்
பளிங்கால் ; மதியோன் கான் உழை வாழ்வு பெற்றாங்கு எழில் காட்டும் - திங்கட்கடவுள் வானிடத்து
வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிதலைப் புலப்படுத்தும் எ-று.
|