பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
277

13

 பகற் குறி

13.2 ஆடிடம் படர்தல்

   
ஆடிடம் படர்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி யாம் புனத்தின்கட்போய் ஊசலாடி அருவியேற்று  விளையாடுவேம் போதுவாயாகவெனத் தலைமகளை ஆயத்தொடுங் கொண்டு சென்று ஆடிடம் படராநிற்றல். அதற்குச் செய்யுள்-

117. புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
        னேபின்னைப் போய்ப்பொலியும்
   அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
        அருவி  திருவுருவிற்
   கயல்வளர் வாட்கண்ணி போதரு
        காதரந் தீர்த்தருளுந்
   தயல்வளர் மேனிய னம்பலத்
        தான்வரைத் தண்புனத்தே.

117

___________________________________________________________

    வான் உழை வாள் - இருட்கு அப்பாலாகிய வானிடத் துண்டாகிய ஒளி ; அம்பலத்து அரன்-இவ்வண்ணஞ் சேயனாயினும் அணியனாய் அம்பலத்தின்கணுளனாகிய அரன்; குன்று என்று வட்கிவெய்யோன் தான் நுழையா-அவனது மலையென்று கூசினாற்போல வெய்யவன் நுழையாவெனக்கூட்டுக. "அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப-ருண்டு போலுமோரொண் சுடர்" (தி.5 ப.97 பா.2) என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. வட்கி யென்பதனால் முன் பற்பறியுண்டானாதல் விளங்கும். வானுழை வாளென்பதற்குக் கற்பவிறுதிக்கண் தோன்றிய முறை யானே வான்சென்றொடுங்கும் ஒளியென்றுரைப்பாருமுளர். புறம் இருளாயெனவும், நாகமலர்ந்தெனவும், சினைவினை முதன்மேலேறி நின்றன. புறம் இருளாயென்பது இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின்மேலேறி நின்றது. இது குறிப்பெச்ச மாதலான், ஆண்டு வாவென்பது கருத்து. மெய்ப்பாடு உவகை. பயன் குறியிட முணர்த்துதல்.  

116


13.2.
  வண்தழை யெதிர்ந்த வொண்டொடிப் பாங்கி
      நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.


   
இதன்பொருள்: பொன்னே - பொன்னே; காதரம் தீர்த்து அருளும் தயல் வளர் மேனியன் - பிறவி காரணமாகவரு மச்சத்தை நீக்கி