வ
பகற்
குறி
வினைவளம் நீறெழ
நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன்
னாயன்ன
காண்டும்
புனமயிலே.
118
______________________________________________________________
தொழா நின்று துயிலெழுவாருடைய
வினையினது பெருக்கம் பொடியாக; நீறு அணி அம்பலவன்றன் வெற்பிற் - தன் றிருமேனிக் கண் நீற்றையணியும்
அம்பலவனது வெற்பில்; புனை வளர் கொம்பர் அன்னாய் -கைபுனையப்பட்ட வளர்கொம்பையொப்பாய்;
தினைவளம் காத்து -தினையாகிய வளத்தைக் காத்து; சிலம்பு எதிர்கூஉய்-சிலம்பிற்
கெதிரழைத்து; சிற்றில் முற்று இழைத்து - சிற்றிலை மிகவுமிழைத்து; சுனை வளம் பாய்ந்து
-சுனைப்புனலிற் பாய்ந்து; துணை மலர் கொய்து - ஒத்த மலர்களைக் கொய்து; அன்ன புனமயில் காண்டும்-அத்தன்மையவாகிய
புனமயிலைக் காண்பேம்யாம் எ-று.
மலைக்கு வளமாதனோக்கித் தினைவளமென்றாள்,
தினையினது மிகுதியெனினுமமையும். தொழுதெழுவாரென்றது துயிலெழுங்காலத்தல்லது முன்னுணர்வின்மையான்
உணர்வுள்ள காலத்து மறவாது நினைவார் என்றவாறு. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்குமெழிலுடைமையான்
அக்கோலந் தொழுதெழுவாருள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ளவினை நீறாமென்னுங் கருத்தால்,
வினைவள நீறெழ நீறணியம்பலவனென்றார். புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற்போலத் தொழுதெழுவார்
வினைக்குத் தானீறணிந்தானென்பாருமுளர். வெற்பினென்புழி வெற்பைத் தினைகாத்தல் முதலாகிய தொழிற்கு
இடமாக வுரைப்பினுமமையும்.
அத்தன்மையவாகிய மயிலென்றது
பொருளதி காரத்திற் கூறப்பட்ட தலைமகள் தான்றமியளாய் நின்று கண்ட மயிலை. இயற்கைப்புணர்ச்சிய
திறுதிக்கட் டோழி தனது வாட்டத்தை வினவியபோது யானோரிள மயிலாலுவது கண்டேன்; அதனை நீயுங்
காணப் பெற்றிலை யென வாடினே னென்று உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப் பற்றி அம்மயிலைக்
காண்டு மென்றாளாயிற்று. மெய்ப்பாடு: அது. பயன்: ஆயம்பிரிதல்.
118
|