13
பகற்
குறி
13.4. இடத்துய்த்து நீங்கல்
இடத்துய்த்து நீங்கல் என்பது
குறியிடைக் கொண்டு சென்ற தோழி யான் அவ்விடத்துச்சென்று நின்குழற்குப் பூக்கொய்து வருவேன்;
அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் நீ என்னோடு வாராது இங்கேநின்று
பூங்கொய்வாயாக வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தானீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
119. நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல்
கொங்கார்
தடமலர் கொண்டுவந்தே.
119
_____________________________________________________________
13.4. மடத்தகை மாதரை இடத்தகத்
துய்த்து
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: உங்கே சென்று
- யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தடமலர் கொண்டு வந்து
-தேனானீரிய பூங்கொத்தைமூடிய அளிகள் முரலுந் தாதுநிறைந்த பெரியமலர்களைக் கொய்து கொண்டு வந்து;
உன் வார் குழற்கு வேய்தருவன்-நின்னுடைய நெடியகுழற்கண் வேய்வேன்; பரன் தில்லை அன்னாய் -
பரனது தில்லையை யொப்பாய்; நரல் வேய் இனம் நின தோட்கு உடைந்து உக்க நல்முத்தம் சிந்தி-காற்றானொன்றோடொன்று
தேய்ந்து நரலும் வேய்த்திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள்
சிதறுதலால்; பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் - பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக் கணுறைக்கும்;
வரல் இங்கே நில் - அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலையல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.
யான்றருவன் நீ வேயென்றும்
பிறவாற்றானு முரைப்பாருமுளர். குரலென்பது பூங்கொத்தை. தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாருமுளர்.
பரல்வேயறை யுறைக்கும் வரல்; வேய்தருவன்; இங்கேநில்லென்று தலைமகளைத் தோழி கூறி
|