பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
281

13

 பகற் குறி

13.5 உவந்துரைத்தல்

   
உவந்துரைத்தல் என்பது தோழி தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்காநிற்பத் தலைமகன் சென்றெதிர்ப்பட்டு, இக்குவட்டை மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ நீ இப்பொழிற்கண் வந்து நின்றதெனத் தலைமகளை உவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

120. படமா சுணப்பள்ளி யிக்குவ
        டாக்கியப் பங்கயக்கண்
    நெடுமா லெனவென்னை நீநினைந்
        தோநெஞ்சத் தாமரையே
    இடமா விருக்கலுற் றோதில்லை
        நின்றவன் ஈர்ங்கயிலை
    வடமார் முலைமட வாய்வந்து
        வைகிற்றிவ் வார்பொழிற்கே.

120

______________________________________________________________

இவ்விடத்தே நில்லென்றாள். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல்.

119

13.5.  களிமயிற் சாயலை யொருசிறைக் கண்ட
      ஒளிமலர்த் தாரோ னுவந்து ரைத்தது.


   
இதன் பொருள்: வடம் ஆர் முலை மடவாய்-வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வார்பொழிற்கு வந்து வைகிற்று-தில்லைக்கணின்றவனது குளிர்ந்த கயிலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து வந்து தங்கியது; இக்குவடு படமாசுணப்பள்ளி ஆக்கி-இக்குவட்டைப் படத்தையுடைய மாசுணமாகிய பள்ளியாக்கி; என்னைப் பங்கயக் கண் அந்நெடுமால் என நீ நினைந்தோ-என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும் பங்கயம் போலுங் கண்ணையுடைய அந்நெடியமாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத்தாமரையே இடம் ஆ இருக்கல் உற்றோ-நெடுமாலின் மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய தாமரையே நினக்கிடமாக இருக்க நினைந்தோ?, கூறுவாயாக எ-று.

   
மாசுணப்பள்ளி - மாசுணத் தானியன்ற பள்ளியெனினுமமையும். என்னெஞ்சத் தாமரைக் கணிருக்கலுற்றோ வென்றதனான்,