பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
282

13

 பகற் குறி

13.6. மருங்கணைதல்

   
மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக் கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் கண்புதைத்து ஒருகொடியினொதுங்கி வருந்தாநிற்ப, சென்றுசார்தலாகாமையிற்றலைமகன் அவ்வருத்தந் தணிப்பான்போன்று, முலையொடு முனிந்து அவளிறுமருங்கு றாங்கி யணையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

121. தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
        லோனரு ளென்னமுன்னி
    முத்தீன் குவளைமென் காந்தளின்
        மூடித்தன் ஏரளப்பாள்
    ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
        றாள்மருங் குல்நெருங்கப்
    பித்தீர் பணைமுலை காளென்னுக்
        கின்னும் பெருக்கின்றதே.

121

______________________________________________________________

இப்பொழிற்கண் வந்து நின்றநிலை ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென உவந்து கூறினானாம். கயிலைமட வாயென்றியைப்பினுமமையும். வான்பொழிலென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய பேருவகையை ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம்.

120

13.6.  வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
     கோதை வேலவன் ஆதர வுரைத்தது.

   
இதன் பொருள்: தொத்து ஈன் மலர்ப் பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி - கொத்துக்களையீனும் மலர்ப் பொழில்களையுடைய தில்லையிற் றொல்லோனதருள்போல வந்தெதிர்ப்பட்டு; முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி - கண்ணீர்த் துளியாகிய முத்தைவிடாநின்ற கண்ணாகிய குவளைகளைக் கையாகிய மெல்லிய காந்தட்பூவான் மூடி; தன் ஏர் அளப்பாள் ஒத்து - அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள் போன்று; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க - குளிர்ந்த கொடியின்கண் நாணி மறைகின்றவளது மருங்குலடர்ப்புண்ண; பித்தீர் பணைமுலைகாள் - பித்தையுடையீர் பணைமுலைகாள்; இன்னும்