பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
283

13

 பகற் குறி

13.7 பாங்கியறிவுரைத்தல்

   
பாங்கி யறிவுரைத்தல் என்பது மருங்கணைவிறுதிக்கட்டலை மகளதையந்தீர, அவளைக்கோலஞ்செய்து, இது நின்றோழி செய்த கோலமே; நீ கலங்கா தொழிகெனத் தலைமகன் தான்றோழியொடு தலைப்பெய்தமை தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

122. அளிநீ டளகத்தின் அட்டிய
        தாதும் அணியணியும்
    ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
        மாலையுந் தண்நறவுண்

_____________________________________________________________

பெருக்கின்றது என்னுக்கு - நும்பெருமைமேல் இன்னு நீர்பெருக்கின்ற- தெற்றிற்கு? இது நன்றன்று எ-று.

    தமக்காதார மென்று கருதாது அடர்க்கின்றமை நோக்கி, பித்தீரென்றான். பெருக்கின்ற தெற்றிற்கு நீர் பித்தையுடையீரென வினைக்குறிப்பு முற்றாகவுரைப்பினுமமையும். இவ்வாறு தானாதரவுரைத்து இறுமருங் குறாங்குவானாய்ச் சென்று சாருமென்பது, ஈன்கொடி, ஈன்பணை முலையென்பனவும் பாடம். ஈன்கொடி - மலரீன்றகொடி. அரிவை யையென்பது பாடமாயின் நாணுதல் கண்ட வென்பனவற்றை ஒருசொல்லாக்கி முடிக்க. மெய்ப்பாடு: அது. பயன்: சார்தல்.

121

13.7.  நெறிகுழற் பாங்கி
     அறிவறி வித்தது.


   
இதன் பொருள்: நீ தண் நறவு உண் களி எனச் செய்தவன் கடல் தில்லை. அன்னாய் - நீ குளிர்ந்த நறவையுண்ணுங் களிமகனென்று பிறர் சொல்லும் வண்ணம் ஓரின்பத்தை யெனக்குச் செய்தவனது கடலையுடைய தில்லையையொப்பாய்; அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் - அளிகள் விடாது தங்கு மளகத்தின்கண் இட்டதாதும்; அணி அணியும்-அணிந்தவணிகளும்; ஒளி நீள் சுரிகுழல்சூழ்ந்த ஒண் மாலையும்-ஒளியையுடைய நீண்ட சுரிகுழல் இடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்; நீ அனைய பொன்னே பன்னுகோலம்-நின்னோடொருதன்மையளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங் கோலமே; திரு நுதலே - திருநுதலாய்; கலங்கல்-